• சற்று முன்

    சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம்கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டினார்.


    சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

    கள்ளக்குறிச்சி அருகே சிறுவாங்கூர் கிராமத்தில் சுமார் 8 ஹெக்டேர் பரப்பளவில்  381 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த மருத்துவக்கல்லூரிக்கு, மத்திய அரசு பங்களிப்பாக 60 சதவிகித நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியின் மூலம் கூடுதலாக 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் நெட்டூர், அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி, தர்மபுரி மாவட்டம் பேளார அள்ளி, சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி மற்றும் திருப்பூர் மாவட்டம் வெள்ளிரவெளி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட ஆரம்பசுகாதார மைய கட்டிடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.


    இந்த நிகழ்ச்சிகளில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad