சூதாட்டத்தில் ஈடுபட்ட லாட்ஜ் மேலாளர் கைது..
வேலூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட லாட்ஜ் மேலாளர் உட்பட 15 பேரை கைது செய்த போலீசார் 2.15 லட்சம் பறிமுதல் செய்தனர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கடந்த சில நாட்களாக சூதாட்டம் நடத்தப்படுவதாக வேலூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர் அப்போது அங்கிருந்த மேனேஜர் உட்பட 15 பேர் பணம் வைத்து சீட்டு ஆடிக்கொண்டிருந்தனர் இதனையடுத்து அனைவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 14 ஆயிரத்து பறிமுதல் செய்தனர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







கருத்துகள் இல்லை