• சற்று முன்

    சென்னை பெரம்பூரில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.


    சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆட்கொல்லி வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு  தெரிவித்தார்.

    மேலும், அவர்களுக்கு பரிசுப் பொருட்கள், வைரஸ் தடுப்பு மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி கௌரவித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், திரு.வி.க நகர் மண்டலத்தில் பாதிப்பை 6% ஆக குறைக்கும் முயற்சியில் முன்களப் பணியாளர்களும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக  கூறினார். தமிழகத்தில் இந்த வருடம் 56% கூடுதல் மழைப்பொழிவு கிடைத்துள்ளதாகவும், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாக தெரிவித்த அவர், பொருளாதாரத்தில் முதலிடம் பிடித்து தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், தி.மு.க வின் வைரஸ் தடுப்புப் பணிகளை தடுக்கவே இ-பாஸ் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதாகக் கூறிய உதயநிதியின் குற்றச்சாட்டிற்கு அவர் பதில் அளித்தார். வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவே இ-பாஸ் முறை நடைமுறையில் இருப்பதாக கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad