இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் IFHRMS - ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம். ஜெயச்சந்திரன், கருவூல கணக்குத் துறையின் வேலூர் மண்டல இணை இயக்குனர் புவனேஸ்வரி, வேலூர் மாவட்ட கருவூல அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆகஸ்ட் -2020 முதல் IFHRMS திட்டத்தின் புதிய மென்பொருள் மூலம் ஊதியம் மற்றும் சில்லறை செலவினம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக IFHRMS திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது தலைமையில் ஊதிய பட்டியல் தயாரிப்பது குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர் களுக்கு (DDO's) பயிற்சி வழங்கப்பட்டது.
செய்தியாளர் சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை