போரூர் அருகே கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த பழைய கார் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் பாலாஜி. இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 6 மாதமாக போரூர் அருகே உள்ள மௌலிவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த பாலாஜி, வளசரவாக்கத்தில் கடைசி மனிதன் என்ற பெயரில் யு டியூப் சேனலும் நடத்தி வந்துள்ளார். இதற்காக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடன் பத்து லட்சத்திற்கும் மேலாக கடன் பெற்றுள்ளார். தற்போது கொரோனா முடக்கத்தால் வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில நேற்று இரவு வீட்டில் சோகத்துடன் உட்கார்ந்திருந்த பாலாஜி, அனிதாவிடம் சூப் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி சூப் வாங்க கடைக்குச் சென்ற அனிதா திரும்பிவந்து பார்த்தபோது பெட்ரூம் பேனில் துப்பட்டாவால் தூக்குமாட்டிக் கிடந்துள்ளார்.
அவரை கீழே இறக்கி போரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாலாஜி உயிரிழந்தது குறித்து மாங்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை