Header Ads

  • சற்று முன்

    சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா? சாப்பிட்டா உடலில் என்ன நடக்கும்?


    வேர்க்கடலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதில் அதிகப்படியான கொழுப்பு இருக்கிறது என்று நாம் அதை தவிர்த்து விடுகிறோம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருப்பார்கள். உண்மையில் நீரிழிவு நோயுள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா, கூடாதா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



    நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்பது நீண்ட நாட்களாக சர்க்கரை நோயாளிகளின் சந்தேகம். வேர்க்கடலையில் வெண்ணைய் தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வேசர்க்கடலையின் பயன்கள் என்ன?, நீரிழிவு நோயாளிகளுக்கு அது எந்த வகையில் உதவுகிறது, வேர்க்கடையில் என்னென்ன உணவுகள் தயாரித்து சாப்பிடலாம் என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.

    இந்தியாவில் 72 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு நீரிழிவு நோயில் உலகில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. (2017 தரவுகளின் படி). உலகின் மொத்த நீரிழிவு நோயாளிகளில் 49 சதவிதிம் இந்தியாவில் இருக்கின்றனர்.

    வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் 3 மாத வயதுக்குட்டபட்ட குழந்தைகள் முதல் குழந்தைகளிடையிலும் நம் நாட்டில் நீரிழிவு நோய் பரவலாகக் காணப்படுகிறது. ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு வழக்கமாக உடற்பயிற்சி செய்வது மட்டுமே நீரிழிவு நோயை கையாளும் சிறந்த வழியாகும். சிலருக்கு இன்சுலின் ஊசியும் மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றாலும், சரிவிகித உணவும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் நீரிழிவு நோயாளிகளுக்கு நீண்ட நாட்களில் நல்ல பயனைத் தரும்.


    வறுத்த வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாக சாப்பிட ஆரோக்கியமான சுவையான ஸ்நாக்ஸ் ஆகும். உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளுடன் வறுத்த வேர்க்கடலையுடன் சிறிது எலுமிச்சை சாறும் உப்பும் சேர்த்து செய்வது தான் வேர்க்கடலை சாட். இந்த ரெசிபி சுவையான ஆரோக்கியமான நொறுக்குத்தீனியாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad