Header Ads

  • சற்று முன்

    சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை


    சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் மீண்டும் நேரடி விசாரணையைத் தொடங்குவது என மூத்த நீதிபதிகள் 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் இருந்து 5 மாதங்களாக உயர்நீதிமன்றத்தில் முதன்மையான வழக்குகள் மட்டும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் செப்டம்பர் 7 முதல் 2 வாரங்களுக்கு சோதனை அடிப்படையில் நீதிமன்ற அறையில் நேரடி விசாரணையை நடத்துவது எனத் தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.காலையில் 3 அமர்வுகள், மாலையில் 3 அமர்வுகள் என 6 அமர்வுகள் மட்டும் நேரில் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 160 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நீதிமன்ற அறைகளில் வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. அதேநேரத்தில் வழக்கறிஞர் சங்கங்களைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad