Header Ads

  • சற்று முன்

    முடிவுக்கு வரும் ஊரடங்கு.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்.!!

     

    தமிழகத்தில் அரசு மேற்கொண்டு வரும் தீவிர தடுப்பு பணியால், கொரோனா கட்டுக்குள் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மருத்துவ கண்காணிப்புக்காக 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்தவாரம் தொடங்கி வைக்க உள்ளார்.


    இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியவை, அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டத்தின் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பு காண சிறப்பு பெட்டகம் ரூபாய் 2500-க்கு வழங்கப்படும். அந்த பெட்டகத்தில் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பை கண்காணிப்பதற்கான ஆக்சிஜன் மீட்டர், வெப்ப நிலையை அறியும் டிஜிட்டல் தெர்மல் மீட்டர் ஆகியவை இருக்கும்.

    மேலும், 14 நாட்களுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீர், நோய் சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல்வலிமைக்காண அமுக்ரா மாத்திரைகள், 14 முக கவசங்கள், சோப்பு போன்றவற்றை இடம் பெற்றிருக்கும். நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் அடங்கிய கையேடும் அந்த பெட்டகத்துடன் வழங்கப்படும்.

    அத்துடன் உடலை பரிசோதனை மைய அலுவலர்கள் தினமும் நோயாளியுடன் வீடியோ காலில் பேசுவார்கள். மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் காணொளி மூலம் உரையாடி நோயாளிகளின் உடல்நிலையும், மனநிலையும் பரிசோதிப்பார்கள். இதன்மூலம் வீட்டில் இருந்தாலும் நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதை கண்டறியமுடியும். இத்திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் விரிவுபடுத்த உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இத்திட்டம் கொரோனா அச்சத்தில் உள்ள மக்களின் மனதில் தெம்பும் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. இதனை அறிவிக்க காரணம், ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad