Header Ads

  • சற்று முன்

    மாஸ்க் அணிந்து போலீசார் ஒத்திகை சுதந்திர தின விழாவை முன்னிட்டு....


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி உருவானது மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன் பணியாற்றி வருகின்றனர் இம்மாவட்டத்தில் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினவிழா நடந்தது மாவட்டத்தில் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது இதையொட்டி போலீசார் ஒத்திகை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது 

    ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி பூரணி மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த ஒத்திகை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமை தாங்கினார் வாலாஜா ஆய்வாளர் பாலு, திருநாவுக்கரசு, தமிழ்ச்செல்வி ஜார்ஜ் சர்குணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 85 பேர் கொண்ட ஆயுதப்படை போலீசார் மாஸ்க் அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டனர் ராணிப்பேட்டையில் சுதந்திர தின விழாவில் சுமார் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும் மாணவ மாணவிகளுக்கு இல்லை எனவும் அரசு விதிமுறைகளை கடைபிடிக்க சுதந்திர தின விழா நடைபெறும் என்று என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது..

    செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad