Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி ஆய்வு -தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு


     கோவில்பட்டி அருகே  மாசார்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை பாராளுமன்ற குழு திமுக துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி ஆய்வு -தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்திலுள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டும் என இந்த பகுதி மக்கள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பியிடம் கோரிக்கை விடுத்தனர் இதைத் தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கினார்

    இதைத்தொடர்ந்து கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளை பாராளுமன்ற குழு திமுக துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி இந்த கிராமத்திற்கு நேரில் வருகை தந்து பள்ளி கட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதிகாரியிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார் தொடர்ந்து மாசார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பங்கேற்று கர்ப்பிணி பெண்கள். பெண்கள் மற்றும் முதியோர்கள் என சுமார் 200 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்‌.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad