வேலூர் புறநகர் ஒன்றியம், அப்துல்லாபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளித்தலைமையாசிரியர் தேசிய கொடிஏற்றினார்.
வேலூர் மாவட்டம், வேலூர் புறநகர் ஒன்றியம், அப்துல்லாபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளித்தலைமையாசிரியர் இம்மானுவேல்தாஸ் தேசிய கொடியை ஏற்றினார்.அனைத்து ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி விழாவினை சிறப்பித்தனர். விழாவில் கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் அளிக்கப்பட்டது. விழாவில் பள்ளியின் சார்பாக ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் 15 பேருக்கு 10 கிலோ அரிசியும் ஒரு கிலோ துவரம்பருப்பும் அளித்து, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் வேலூர் லயன்ஸ் கிளப் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு பேனா வழங்கப்பட்டது.
செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை