• சற்று முன்

    7 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு !



    கோவை, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவு இருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

    7 மாவட்டங்கள் இந்த நிலையில், கோவை , நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


    சென்னையில் மேகமூட்டம் மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் 5 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தளவில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இவ்வாறு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad