Header Ads

  • சற்று முன்

    கொரனோ தடுப்பு சிறப்பு அதிகாரி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு



    இராணிப்பேட்டை மாவட்டத்தில்   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மாநில கண்காணிப்புக் குழு அதிகாரி (Monitoring Officer) லஷ்மிபிரியா, இ. ஆ. ப., கூடுதல் ஆணையர் (வணிகவரி) மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்ஷினி அவர்கள் ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மருத்துவ குழுவினர் உடன் ஆலோசனை நடைபெற்றது. 



    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம்   விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு சுகாதார மருத்துவமனையையும்,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளையும்  மற்றும் மகாலட்சுமி கல்லூரியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள Covid Care Center(ccc) அமைந்துள்ள   விடுதிகளையும், Covid -19 தொற்று நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தும் மையம் மற்றும் சித்த மருத்துவ சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள  மாநில கண்காணிப்பு குழு அதிகாரி (Monitoring Officer) G.லட்சுமி பிரியா இ. ஆ. ப., கூடுதல் ஆணையர் (வணிகவரி) அவர்கள்  அக் கல்லூரியில்  கரோனோ நோயினால் பாதிக்கப்பட்டு தனிப்பட்ட நபர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் அனைத்து வசதிகளும் நல்ல முறையில் கிடைக்கிறதா என்று அங்குள்ள நபர்களிடம் கேட்டறிந்தனர்.

     

    மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகள், ஏற்பாடுகள் தயாராக உள்ளனவா என்பது  குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.  மாவட்ட ஆட்சியர்  ச. திவ்யதர்ஷினி  அவர்கள் , கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை/ திட்ட இயக்குனர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், மருத்துவ இணை இயக்குனர் மருத்துவர் யாஸ்மின், மருத்துவ சுகாதார அலுவலர் வேல்முருகன் ஆற்காடு வட்டாட்சியர் , மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad