Header Ads

  • சற்று முன்

    வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி. அவர்கள் வழங்கினார்


    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1429 பசலி 2019 20 ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் வாலாஜா வட்டத்தில் 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  திவ்யதர்ஷினி. அவர்கள் வழங்கினார் வருவாய்த்துறையின் பணிகளை முடிப்பது சம்பந்தமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1429 பசலி 2019 20 ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி வாலாஜா அரக்கோணம் கலவை ஆற்காடு நெமிலி மற்றும் சோளிங்கர் வட்டங்களில் நடைபெற்றது
     

    இந்நிகழ்ச்சியில் ஜூன் மாதம் நடைபெற வேண்டியது ஊரடங்கு தடை உத்தரவால் ஜூலை மாதத்தில் நடைபெறுகின்றது covid-19 வைரஸ் நோய் தொற்று ஊரடங்கு தடை நாட்களில் பொதுமக்களிடம் நிலம் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து நேரடியாக மனுக்களை பெறுவதை தவிர்த்து ஆன்லைன் மூலமாக மக்கள் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதுஅதன் அடிப்படையில் ராணிப்பேட்டை வாலாஜா வட்டத்திற்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி தணிக்கை நிகழ்வு நடைபெற்று அனைத்து வருவாய் கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு இன்று நிறைவு பெற்றது இந்த நிறைவு நாள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மொத்தமாக 198 மனுக்கள் பெறப்பட்டது இதில் 90 மனுக்கள் ஏற்கப் பட்டது 46 மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது மேலும் 62 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது இன்றைய தினம் இலவச வீட்டு மனை பட்டா 31 பயனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோர் உதவித் தொகை 15 பயனாளிகளுக்கும் விதவை உதவித்தொகை 3 பயனாளிகளுக்கும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை இரண்டு நபர்களுக்கும் வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் புதிய குடும்ப அட்டை மூன்று நபர்களுக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் இலவச தையல் இயந்திரம் இரண்டு நபர்களுக்கு இலவச சலவைப்பெட்டி இரண்டு நபர்களுக்கு மொத்தம் 90 பயனாளிகளுக்கும் 11,70,506லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 15 பயனாளிகளுக்கும் வழங்கினார்கள் மற்ற பயனாளிகளுக்கு அவரவர் கிராமங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி இளவரசி சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி ஜமாபந்தி மேலாளர் பாபு வாலாஜா வட்டாட்சியர் பாக்கியநாதன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் நில அளவையர் கள் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்.ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad