Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஒரு கோடி கையெழுத்து இயக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


    திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு விரோத மத்திய அரசு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய ஒரு கோடி கையெழுத்து இயக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நெஞ்சக் கல்லூரி அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முல்லை தலைமையில் மத்திய 4 அம்ச கோரிக்கையை திரும்பப் பெறக்கோரி ஒரு கோடி
    கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் ஆக மத்திய அரசு தற்போது வெளியிட்ட மின்சார திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருட்கள்,வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம்
    விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேலன் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாடு தழுவிய ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற்றது. அதுமட்டுமின்றி விவசாயிகள் தங்களது வீட்டின் மேல் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad