ராணிப்பேட்டை வேலூர் மாவட்ட எல்லைகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கலெக்டர் அதிமுகவினர் வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பன்னாட்டு மலர் ஏலம் மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் வளர்ச்சி திட்டப்பணி மற்றும் கொரநாத் தடுப்புப் பணி குறித்து ஆய்வு கூட்டம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்த நடக்கிறது இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரிக்கு சென்றார் 8:15 அளவில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டறை பகுதிக்கு வந்த முதல்வரை கலெக்டர் திவ்யதர்ஷினி எஸ்பி மயில்வாகனன் ஆகியோர் வரவேற்றனர்
உடன் அமைச்சர் கே சி வீரமணி உடன் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஸ்ரி ரவி சங்கர் எம்எல்ஏ சம்பத் எம்பி முகமது ஜான் ஆகியோர் வரவேற்றனர்
முதல்வர் வருகையையொட்டி அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இதேபோல் எட்டு முப்பத்தி ஐந்து மணிக்கு வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் வந்த முதல்வர் பழனிசாமி மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அமைச்சர் கே சி வீரமணி மற்றும் அதிமுகவினர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் பள்ளிகொண்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டார்.
எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை