• சற்று முன்

    :தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் பலி

    தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட  கீழ செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீரை அகற்றுவதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேர் வேலைக்கு சென்றுள்ளனர்.
    கழிவுநீரை அகற்றுவதற்காக முதலில் 2 பேர் தொட்டியில் இறங்கி நீரை அகற்றியுள்ளனர். அப்பொழுது அவர்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவர்களை கூப்பிட்டுக்கொண்டு மற்ற  2 பேர் தொட்டியில் இறங்கியுள்ளனர். அப்பொழுது 4 பேரும் நீண்ட நேரமாக மேலே வராததால் தொட்டியில் எட்டிப் பார்த்த பொழுது  கழிவுநீர் தொட்டியில் இருந்த விசவாயு

     
    தாக்கி  4 பேரும் மூச்சு திணறி கிடந்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடியில் இருந்து தீயணைப்பு வரவழைக்கப்பட்டு கழிவுநீரில் தொட்டிக்குள் மயங்கி கிடந்தவர்கள் வெளியே தூக்கினர். அப்போது 3 நபர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரும் அங்கே வைத்து உயிரிழந்துள்ளார்..இந்த விபத்து குறித்து தட்டபாறை போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad