சோளிங்கரில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்!
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சோளிங்கர் போஸ்டாபிஸ் தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கோபி அமைப்பு செயலாளர்கள் ஏகாம்பரம் தட்சிணாமூர்த்தி ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வசித்தனர். நகர தலைவர் பிரபாகரன்அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் சுதாகர் கலந்து கொண்டு மத்திய அரசே மாநில அரசேவெளிநாடுகளில் வேலையிழந்து உணவிற்கே தவித்து வரும் தாயக தமிழர்களை உடனே அழைத்து வா அயல்நாடுகளுக்கு பிழைக்க சென்ற தாயக தமிழர்களுக்கு தனி நலவாரியம்உடனே அமைத்திடவேண்டி வாசகங்கள் அடங்கி பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ்குமார் .
கருத்துகள் இல்லை