கொரோனா வீரியத்தை தொடர்ந்து தற்காலிகமாக தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளது
தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து . கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழக தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை மூன்று அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கொரோனா உறுதி செய்யப்பட்டது . செல்லூர் ராஜுவின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவருக்கும் தற்போது கொரோனா வந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.மின்சார துறை அமைச்சர் தங்கமணி கொரோனா உறுதி செய்யும் முதல் நாள்தான் தலைமைச்செயலகம் வந்து சென்றார் என்பது குறிப்பிட்டதக்கது.
தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்தார். இதனால் முதல்வர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தங்கமணி உட்பட சில அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வந்து சென்றனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா வந்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழக தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளது. தலைமை செயலகத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் 2 நாட்களுக்கு மூடப்பட உள்ளது. மொத்தமாக சுத்தம் செய்த பின் மீண்டும் திறக்கப்படும்.
கருத்துகள் இல்லை