Header Ads

  • சற்று முன்

    குடும்ப அட்டை இல்லாமல் தவிக்கும் ஏழை குடிசை வாசி !


    வேலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் 40 வருடங்களாக ரேஷன் கார்டு(குடும்ப அட்டை) கூட இல்லாமல் ஒலை குடிசையில் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். தனக்கு குழந்தைகள் இல்லை, பார்வை குறைபாடும் உள்ளதாக தெரிவிக்கிறார். தெரு தெருவாக சென்று ஈசல் விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறார். 

    குடும்ப அட்டைக்காக பல முறை முயற்சித்த முதியவர், ஊரில் உள்ள சிலர் ஆரம்பத்தில் 2000 முதல் போக போக 10,000 வரை கேட்ட பணம் இல்லாததாலும், சாகிற வயதில் இனிமேல் எதற்கு குடும்ப அட்டை என சிலர் கேட்டதால் குடும்ப அட்டை பெறும் எண்ணத்தை கைவிட்டுள்ளார்.  இந்நிலையில் முதியவர் கோபால் அவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

    குடும்ப அட்டைக்காக குடியாத்தம் தாலுக்கா அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று குடும்ப அட்டை ஒரு வாரத்தில் கையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியோர் பென்ஷன் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அரசு சார்பில் இவர்களுக்கு வீடு ஒதுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

    மிகவும் வேகமாக செயல்பட்டு குடும்ப அட்டை, முதியோர் பென்ஷன் பெற ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி.  குடும்ப அட்டை இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் அரசு சார்பில் கொடுக்கப்படும் எந்தவொரு நிவாரணமும் இதுவரை பெறாமலேயே இருந்துள்ளார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad