• சற்று முன்

    ஆற்காட்டில் ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் ஏபிஜே. அப்துல்கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம் சிறப்பாக கொண்டாடபட்டது


    முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே. அப்துல்கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி. ஆற்காடு ஜீலை_28    ராணிபேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே. அப்துல்கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம் சிறப்பாக கொண்டாடபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் நிறுவனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். 

    சர்வதேச உரிமைகள் கழகம் ராணிபேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச உரிமைகள் கழக மாநில இணைப்பொதுச் செயலாளரும் ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் கௌரவ தலைவர் முத்துவேல், சர்வதேச உரிமைகள் கழகம் ராணிபேட்டை மாவட்ட தலைவர் ரஞ்ஜித்குமார், கோட்டை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் இறைமொழி ஆகியோர் கலந்து கொண்டு அப்துல்கலாம் அவர்களின் திருவுவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் ஜெயக்குமார், இளங்கோவன், பவன்குமார், சந்தோஷ், சுரேஷ், சீனிவாசன், ராஜேஷ், பாலநாகராஜன், பாபு, சக்திவேல், கார்த்திக், வடிவேல் மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்

    எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad