• சற்று முன்

    கோவில்பட்டியில் தனியார் பேரூந்து (SSRBS ) பயணிகளை இலவசமாக ஏற்றி செல்கிறது

    கோவில்பட்டியில் தனியார் பேருந்து நிறுவனமொன்று தங்களது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்கியுள்ளது.


    கோவில்பட்டியில் எஸ். எஸ். ஆர். பி. எஸ். எனும் தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி கழுகுமலை சங்கரன்கோவில் புளியங்குடி தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது.

    இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் இன்று முதல் லாக் டவுன் காலம் முடியும் வரை தங்களது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக பேருந்து போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


    இதுகுறித்து பேருந்தின் உரிமையாளர; ஸ்ரீதர; கூறுகையில் கொரோனா பாதிப்பினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் நலிந்த நிலையில் உள்ளனர;. ஆகவே மக்களுக்கு உதவிடும் வகையில் அவர்களது பொருளாதார சிரமத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் எங்களது நிறுவனத்தின் பேருந்துகள் மூலம் கழுகுமலை சங்கரன்கோவில் புளியங்குடி தென்காசி உள்ளிட்ட வழித்தடங்களில் இலவசமாக போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய்  வரை இழப்பு ஏற்பட்டாலும் மக்களுக்காக இந்த உதவியை மன நிறைவுடன் செய்கிறோம் என்றார்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad