• சற்று முன்

    கோவில்பட்டியில் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றிய போலீஸ்காரர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சப் டிவிஷனல் போக்குவரத்து காவல் பிரிவில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் மூர்த்தி. வயது 39. இவர்  2003ம் ஆண்டில் காவல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். நாலாட்டின்புதூர் கழுகுமலை கயத்தாறு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். தற்போது  போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வந்த சூழலில்  உடல்நலக்குறைவால் கடந்த சில வாரங்களாக மருத்துவச் சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் மூர்த்தி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 8வது தெருவில் வசித்து வந்த இவருக்கு கோகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad