• சற்று முன்

    வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள பென்னாத்தூரில் போலி பெண் டாக்டர் கைது


    வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள பென்னாத்தூர் கிராமத்தில் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (வயது 38) என்பவர் பொது மருத்துவர் என அறிவித்து, கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மருத்துவ ஆய்வகம் சம்பந்தமான படிப்பு படித்துவிட்டு, டாக்டர் என கூறிக்கொண்டு பொது மருத்துவத்திற்கு சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது. அதன்படி கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் உமாசங்கர் தலைமையிலான சுகாதாரத் துறையினர், நேற்று பென்னாத்தூரில் உள்ள மஞ்சுளா கிளினிக்கை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் மஞ்சுளா போலி டாக்டர் என தெரியவந்ததை தொடர்ந்து மஞ்சுளாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    எமது செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad