• சற்று முன்

    செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு தேசிய பேரிடர் காலத்தில் எதிர் காட்சிகள் கருத்து சொல்லாம் குறை சொல்ல கூடாதென்று கூறினார்


    எட்டு வழிச்சாலை அமைந்தால் நல்ல இருக்குமே என்று சொன்னோமே தவிர
    வேறு ஒன்றும் சொல்லவில்லை - அமைச்சர்  கடம்பூர் ராஜு பதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆண் பெண் தையல் தொழிலாளர்கள் 450 பேருக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் கடம்பூர்  ராஜூ வழங்கினார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :

    கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக கனிமொழி எம்பி குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கையில் - கருத்தை யாரும் சொல்லலாம் அரசின் கருத்தும் அதுதான் இவர்கள் ஏதோ கண்டுபிடித்தவர் போல் குற்றச்சாட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை அரசு அதை கட்டுப்படுத்தியுள்ளது அப்படி அதிகம் கட்டணம் பொற்றால் அந்த மருத்துவமனையின் நிர்வாக அனுமதி ரத்து செய்யப்படும் என்பதை அரசு கூறியுள்ளது. எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து சொல்ல வேண்டுமோ அந்த அளவுக்கு தமிழக அரசு தனியார் மருத்துவமனைக்கு கூறியுள்ளது. இதை மருத்துவ குழு ஆராய்ந்து வருகிறது. அதேபோல் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது,

    எட்டுவழி சாலை என்பது இன்றைக்கு வந்த பிரச்சனை அல்ல  அங்குள்ள உள்ளூர்  மக்கள் விவசாயிகள் போராட்டத்தின் காரணமாகவும் நின்றது இது மத்திய அரசின் திட்டம் இது மாநில அரசு அமல்படுத்தும் திட்டம் அல்ல, நாங்கள் என்ன சொல்கின்றோம் என்றால் வடமாநிலங்களில் சாலைகள் எல்லாம் நம்மைவிட பல மடங்கு மேலோங்கி உள்ளது அப்படிப்பட்ட வசதிகளை சாலைகளை நமது மாநிலத்திற்கு கொண்டு வருகையில் நமது மாநிலத்திற்கு முதல்முறையாக 10 ஆயிரம் கோடியில் கொண்டு வந்துள்ளார்கள். 

    மத்திய அரசுதான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளது மாநில அரசு செல்லவில்லை நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடக்கும் சாலைகள் அமைந்தால் நன்றாக இருக்குமே சொன்னேனே தவிர தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு உள்ளதால் இதை பற்றி இதற்குமேல் கருத்து கூற முடியாது என கூறினார்.  முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் பகதூர் வெள்ளையத் தேவர் அவர் திருவுருவ வெண்கலக்சிலை அமைத்திட ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்களுக்கும் மனித உரிமை காக்கும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் கார்த்திக் அவர்களின் சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வல்லநாட்டில் மனித உரிமை காக்கும் கட்சியில் சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

    நிகழ்ச்சியில் நகர செயளாலர் விஜயபாண்டியன் ஒன்றிய செயளாலர் அய்யாத்துரை பாண்டியன் மாவட்ட ஒன்றிய சேர்மன் சத்யா ஒன்றிய சேர்மன் கஸ்தூரி உட்பட பல்வேறு அமைப்பு பொருப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள்
    கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad