ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா நோய் தொற்று.. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் கே பழனிக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 327 பேர் பலியாகிவிட்டனர்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
R
கருத்துகள் இல்லை