கொரோனா தொற்றால் வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராம மக்களுக்கு புதிய விடியல் பிறந்தது
வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு 72 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத நிலையில் தற்காலிக சாலை அமைத்த மலைகிராமமக்கள் அச்சாலை வழியாக வாகனங்கள் சென்று நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நெக்னாமலை கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் கடந்த 72 ஆண்டு காலமாக சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் மலைகிராம மக்கள் யாரேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டாள் டோலிகட்டி தூக்கி செல்வது வழக்கமாக வைத்திருந்த இந்த கிராம மக்கள் தற்போது 3 கிலோமீட்டர் தூரம் வருவாய்த்துறை சார்பில் உள்ளதாகவும் மேலும் 4 கிலோ மீட்டர் வனப்பகுதியில் உள்ள தால் 7 கிலோ மீட்டர் சாலை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கடந்த மாதம் 21ஆம் தேதி வணிகவரி மற்றும் பத்திர பதிவுதுறை வீரமணி அமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகள் சென்று கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினர் இந்நிலையில் என்ன இருந்து 7 கிலோமீட்டர் சென்று திரும்பியதால் மக்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் இந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வனத்துறை ஒப்புதல் அளிக்க தாமதம் படுத்தி வருவதாகவும் விரைவில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக அன்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி பேட்டி அளித்தார் அதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தாமதமாவதால் மக்கள் தாமாக முன்வந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர் மலைகிராம மக்கள் அமைத்த சாலையில் வாகனங்களில் சென்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான நிலோபர் கபில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் சென்று இன்று மலை கிராம மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினர் இதனால் தற்காலிக சாலை அமைத்த கிராம மக்களுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர் விரைவில் தார் சாலை அமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை