தூத்துக்குடி மண்டல போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் முகக்கவசம் கையுறை ஆகியவற்றை அமைச்சர் வழங்கினர்.
தூத்துக்குடி மண்டல போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் முகக்கவசம் கையுறை ஆகியவற்றை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய 3500 முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.
கருத்துகள் இல்லை