மறுவாழ்வு நிதி உதவி திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(29.6.2020) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை யின் மூலம் 2019 -20 ஆம் ஆண்டிற்கான மறுவாழ்வு நிதி உதவி திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி பூட்டுதாக்கு நாராயணபுரம் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 144 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்ஷினி, இ. ஆ. ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
கால்நடை துறையின் மூலம் 43.2 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் 144 பயனாளிகள் முதல் கட்டமாக அதில் பூட்டுத்தாக்கு கிராமத்தைச் சேர்ந்த 36 நபருக்கும் திமிரி சேர்ந்த ஒரு நபருக்கும் மொத்தம் 37 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா 1.50 லட்சம் வீதம் ஐந்து நபர்களுக்கு மாட்டுக் கொட்டகைகள் அமைத்து தரப்பட்டன. இந் நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க. இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி , கால்நடை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் . பாஸ்கர், டாக்டர் சுப்புலட்சுமி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் லட்சுமணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை