திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிச்சனூர் கிராமத்தில் கிணறு தூர் வாரும் பாதுகாப்பு உபகரணம் இல்லாததால் பாறை விழுந்து பலி
திருவண்ணாமலை மாவட்டம் மதுராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழனி அவரது இரு மகன் சதீஷ் சத்யராஜ் ஆகியோர் கிணறு தூர் வாரும் வேலை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார்கள் இன்று ஆதிச்சனூர் கிராமத்தில் வேலை செய்யும் போது அதே ஊரைச் சேர்ந்த சு. முருகன் என்பவர் வேலை செய்யும் போது பாதுகாப்புக் கருவி இல்லாத காரணத்தினால் ஒரு சிறிய பாறை மேலே விழுந்து சம்பவ இடத்திலே 2.30 மணிக்கு இறந்துவிட்டார் சத்யராஜ் என்பவர் ஒரு காரை பிடித்து TN10BJ2052 திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு இவர் இறந்துவிட்டார் எனக் கூறியதும் என்ன செய்வது என்று தெரியாமல் திரும்ப அவர் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது பின்னர் கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்த நபர் உதவி கேட்க அவர்கள் திரும்பவும் 108 மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் செய்த தவறை மறைக்க பார்க்கின்றார்கள் ஆகையால் கான்ட்ராக்ட் எடுத்த பழனி சத்யராஜ் அவர்கள் மீது உரிய விசாரணை செய்யும்படி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை