கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழ்ப்பு
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த கர்பிணி பெண் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் பெண் சிசு பிறந்தது.
அப்பெண்ணுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து அவரின் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 27 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை