பழனி அருகே ஆயக்குடியில் பள்ளி மாணவியை பாலியில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார்
பழனியருகே பதினான்கு வயது சிறுமியை கற்பழிப்பு செய்ய முயன்றதாக இருவர் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்குள்ள ஏழாவது வார்டு பெரும்பாறை காலணியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும் பதினேழு வயது மற்றும் பதினான்கு வயதுடைய இரண்டு பெண்குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது இளைய மகளை இருவர் கற்பழிக்க முயற்சி செய்ததாகக் கூறி பழனி மகளிர் காவல் நிலையத்தில் வெற்றிவேல் மற்றும் சண்முகவள்ளி இருவரும் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது :-
தங்களது இளையமகள் கடந்த சனிக்கிழமை மாலை பாத்ரூம் செல்வதாகக்கூறி சென்று நீண்டநேரம் ஆகியும் வராததால், சண்முகவள்ளியும், மூத்த மகளும் இளையமகளை தேடி குட்டை பகுதியில் தேடிச்சென்றபோது அங்கிருந்த புதர்பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் தங்களை கண்டதும் தப்பி ஓடியதாகவும், இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது தனது இளையமகள் புதரில் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், இதனையடுத்து 108ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே தங்களது பதினான்கு வயது மகளை கற்பழிக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகார் அளிந்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : சரவணகுமார்
கருத்துகள் இல்லை