ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு கொரோனா தடுப்பு அதிகாரியாக லட்சுமிபிரியா
வேலூர் மாவட்டத்தில் தற்போது 632பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 466 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 6 பேர் இறந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 306 பேரும், CMC மருத்துவமனையில் 185 பேரும், பென்லேண்டு மருத்துவமனையில் 80 பேரும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 30 பேரும், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 20 பேரும் உள்ளனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு கொரோனா தடுப்பு அதிகாரியாக லட்சுமிபிரியா நியமிக்கப்பட்டுள்ளார் .
இன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இதுகுறித்து அவர் ஆலோசனை செய்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி, சார் ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை