• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !!



    தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
    இன்று இதுவரை இல்லாத அளவில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மேலும், இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 582 ஆக உயர்ந்தது. 


    எமது செய்தியாளர் : சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad