வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்களை நேரில் ஆய்வு செய்த காவல் ஆணையர்
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்ட நிலையில், இதில் 21, 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் வாகன தணிக்கை செய்யும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 19ம் தேதி வாலாஜா சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி இப்பணிகளை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். முழு ஊரடங்கு தினமான இன்று பூக்கடை, யானைகவுனி உள்பட சென்னை நகர் முழுவதும் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை சாலைகளில் ஒரு மனிதத் தலையையும் காண முடியவில்லை. சென்னைவாசிகள் இப்படி ஒரு ஊரடங்கை தன் வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது. போக்குவரத்துச் சாலைகள் மட்டுமல்ல .நகரின் உட்புறச் சாலைகள் ,சிறுதெருக்களிலும் கூட ஆள் நடமாட்டத்தைக் காணமுடியவில்லை கொரோணாவிற்கு எதிராக சென்னைவாசிகள் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டமாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இதற்கு சென்னை காவல்துறையை பாராட்டியே ஆக வேண்டும்
கருத்துகள் இல்லை