Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான நிவாரண தொகை 1000 அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்

    கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வைத்துமாற்றுத்திறனாளிக்கான நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  ராஜூ தொடங்கி வைத்தார் .

    தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டார். அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 36, 267 மாற்றுதிறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கும் நிகழ்ச்சியினை கயத்தார் தாலுகா அலுவலகத்தில் அமைச்சர்  கடம்பூர்  ராஜூ துவங்கி வைத்தார்  அதன் படி 3 கோடியே 62 லட்சத்தி 67 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையினை மாவட்டம் முழுதும் உள்ள மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது, இன்று கயத்தார்  பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2446 பேர்களுக்கு 1000 ரூபாய் அமைச்சர் கடம்பூர்  ராஜூ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  சின்னப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியர்  விஜயா, கயத்தாறு  தாசில்தாறு பாஸ்கரன், மற்றும் அதிகாரிகள் அதிமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள்மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad