Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே கயத்தாரில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட கள்ளச் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில்ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்  முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்ததை அடுத்து அவர் வந்த ஆக்டிவா பைக்கில் இருந்த பிளாஸ்டிக் கேனை சோதனையிட்டனர;. அதில் 5 லிட்டர; கள்ளச் சாராயம் பதுக்கி வைத்து விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.. 

    இதையடுத்து போலீசார்   கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து,  சாராய விற்பனையில் ஈடுபட்டதாக சீவலப்பேரியை சேர்ந்த நல்லகண்ணு பாண்டியனை கைது செய்தனர்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் கயத்தாறு பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையும் அதையும் தாண்டி கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக பரவலாகப் குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கபட்டது. தற்போது இருசக்கர வாகனம் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இத்தகைய குற்றச் சம்பவங்கள் நிகழ்வுகள் கயத்தாறு கள்ளச்சாராயம் வியாபாரத்தில் முன்னிலை வகிக்கிறது என்பதை அடையாளப்படுத்தி இருக்கிறது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad