Header Ads

  • சற்று முன்

    விசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 8 பேர் பலி


    ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் அதைச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ரசாயன வாயுவை சுவாசித்த ஒரு சிறுமி உள்பட 8 பேர் பலியாகியுள்ளது.  இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மூவரின் உடல்கள் ரசாயன ஆலைக்கு அருகிலுள்ள பகுதியிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஐவர் மருத்துவமனையில் இறந்துள்ளதாகவும்  இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ரசாயன வாயு கசிவு நடந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
    இந்த வாயுக் கசிவால் சுமார் 200 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 

    மீட்புப் பணிகளைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகபட்டினம் செல்கிறார். ரசாயன வாயுவை சுவாசித்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோசமாக பாதிக்கப்பட்ட 15 முதியவர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் சுமார் ஐம்பது அவசர ஊர்திகள் ஈடுபட்டுள்ளன. பலரும் மயக்க நிலையில் உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad