கோவில்பட்டியிலிருந்து 91 பீஹார் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. இவர்கள் தாங்கள் வேலை
செய்யும் இடத்துக்கு அருகிலேயே கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்..
இந்நிலையில் 50 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் ஊரடங்கைதொடர்ந்து இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.. இதையடுத்து அவர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 91 பேர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி உள்ளிட்ட வருவாய் துறையினர் அவர்களது ஆவணங்களை பரிசோதித்தனர்.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 பேருந்துகளில் பீஹார் மாநில
தொழிலாளர்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து பகல் 12 மணிக்கு மேல் புறப்படும் சிறப்பு ரயிலில் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.








கருத்துகள் இல்லை