விதிமுறைகளை மீறி மதுபானங்கள் வாங்கி வந்த 9 பேர் கைது. 65 மதுபாட்டில்கள் பறிமுதல்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது பல்வேறு விதிமுறைகளுடன் இன்று சில பகுதிகளில் மட்டும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது மதுபானங்கள் வாங்க வேண்டும் என்றால் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்த பகுதிக்கு சென்று மதுபானம் வாங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது இதையடுத்து பூந்தமல்லி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை கூட்டு சாலையில் நசரத்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது தனித்தனியே 9 மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களை மடக்கி சோதனை செய்தபோது மது பாட்டில்களை விதிமுறை மீறி வாங்கி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 65 மது பாட்டில்கள் மற்றும் 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து 9 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை