வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர்
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் கோவில்பட்டி புது கிராமத்தில் தங்கி உணவகத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு உத்தரவினால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுப் பொருளுக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர் இவர்களின் நிலை குறித்து கேட்டறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி பலசரக்கு சாமான்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை தனது சொந்த செலவில் வாங்கி அவர்களின் இல்லம் தேடிச் சென்று வழங்கினார்.மேலும் போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த ஜான்சி ராணி லட்சுமிபாய் தனது மகன் அஜித் குமார் பிறந்த நாளை முன்னிட்டு அவரும் அவர்களின் குடும்பத்தினருக்கு மேலும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் அங்குத்தாய் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை