Header Ads

  • சற்று முன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்


    அரசு அனைத்து கட்சியினரை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம் அது முதல்வரால் நிராகரிக்கப்பட்டது, திமுக தலைமையில் இயங்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீடியோ கான்பிரஸ் மூலம் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

    தமிழக முதல்வர் பேசுகையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார், கொரோனா நடவடிக்கைகளில் எங்களிம் முழு ஒத்துழைப்பு என்றுமே இருக்கும் இதை தான் தொடர்ந்து கூறி வருகிறோம் இதை தான் மீண்டும் கூறுவோம், பிரதமர் ஊரடங்கை அறிவித்தது தவறல்ல வேறு வழியில்லை மேலும் 7 அறிவுரைகள் வழங்கினார் இது சரி தான் என்றாலும் கூட சாமானிய  பொருளாதர நிலை என்னவாகும்?. மீண்டும் அமைப்புசார தொழிலாளர்களுக்கு 1000கிடைக்கும் என தெரிவித்துள்ளது மாநில அரசு ஆனால் இது தவிற அன்றாட கூலி தொழிலாளர்கள் உள்ளனர்  இதையெல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் பட்டினி சாவு ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    அமைப்பு சார தொழிலாளர்கள் பதிவு செய்தால் மட்டும் போதாது புதுப்பித்திருக்க வேண்டும் ஆனால் பெரும்பான்மையான புதுபிக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை நிலை.அரசு விவாசாய பொருட்களை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் 

    யாரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது, ஊதியத்தை நிறுத்தக்கூடாது என மத்திய மாநில அரசு கூறுகிறார்கள், ஆனால் அவர்களுக்கே இன்னும் சரிவர ஊதியம் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறையினர் அர்பணிப்புடன் பணி செய்கிறார்கள் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கவேண்டும். பல இடங்களில் துப்புரவு பணியாளர்களை மாலை அணிவித்து பூஜை செய்து மரியாதை செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு 12ஆயிரம் ஊதியமே முறையாக கிடைக்காத நிலை உள்ளது. நியாயவிலைக்கடைளில் அத்தியாவசிய பொருட்களை கேரளாவில் வினியோகம் செய்வதை போல் இங்கும் செய்ய வேண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் பொருட்கள் இருப்பு இல்லையென தகவல் கிடைத்துள்ளது இதனை சரி செய்ய வேண்டும். மின் கட்டணத்தை சில மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும்
    மக்களின் துயரை நன்கு அறிவேன் என்று சொல்லும் பிரதமர், அதற்கான தீர்வை சொல்லவில்லை. 

    தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும் இது அரசியல் கட்சிக்கான பிரச்சனை அல்ல அனைவருக்குமான பிரச்சனை மாநில அரசு அனைவரின் ஒத்துழைப்பும் பெற வேண்டும். தளர்வு பற்றி அரசு அறிவித்துள்ளது உதாரணமாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உணவங்களை திறந்துக்கொள்ளலாம் என்கிறார்கள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லையென்ற போது திறந்து என்ன பயன் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் .3ஆம் தேதி வரை ஊரடங்கு என்பதில் மாற்று கருத்து இல்லை.

    மக்கள் நலப்பணியில் ஈடுபடும் மருத்துவர், மருத்துவ பணியாளர்கள் இறந்து போனால் போரில் இறந்த வீரர்களை போல் மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகை கேட்க கூடாது என அரசு கூறியுள்ளது ஆனால் இந்துசமய அறநிலையத்துறை இடங்களில் குடியிருப்போரை வாடகை கொடுக்க வலியுறுத்த கூடாது என்பதை கேட்டுகொள்கிறேன்...


    பேட்டி - முத்தரசன்
    இடம் - தி.நகர் , பாலன் இல்லம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad