கொரோனாவால் உயிரிழந்தவர்ககளை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்தால்தனது கல்லுரியில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என தே.மு.தி .க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்தால், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அதற்காக எடுத்துக்கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்து வேதனை அடைந்திருப்பதாகவும் மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது வேதனை அளிக்கிறது என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத்தெரிவித்தால், தன்னுடைய பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை அதற்காக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை