Header Ads

  • சற்று முன்

    அமெரிக்காவில் குடியேற தற்காலிக தடை டிரம்ப் அறிவிப்பு


    கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை பறி போய் உள்ள நிலையில், வெளிநாட்டவர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    டுவிட்டரில் இதைத் தெரிவித்துள்ள அவர், கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி நடத்தும் தாக்குதலின் பின்னணியிலும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாலும் இது குறித்த அதிபரின் உத்தரவில் விரைவில் கையெழுத்திட உள்ளதாக கூறியுள்ளார். அதே சமயம் அமெரிக்காவில் அதிக அளவில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய H-1B விசாக்கள் குடியேற்ற விசாக்கள் அல்ல என்பதால் டிரம்பின் அறிவிப்பு குறித்து குழப்பம் நிலவுகிறது. கொரோனாவால் சுமார் இரண்டேகால் கோடி அமெரிக்கர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad