எட்டயபுரம் பவர் கிரிட் ஆஃப் இந்தியா சார்பில் மேல ஈரால் ஊராட்சிக்கு ஒரு லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண உதவிகள்
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பவர் கிரிட் ஆப் இந்தியா சார்பில் மேல ஈரால் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஊழியர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்ற ஏழை எளியவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி சின்னப்பன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பவர் கிரிட் ஆஃப் இந்தியா டி.ஜி.எம். ஜெரீனா, மேனேஜர் ராஜேஸ்வரி, அசிஸ்டன்ட் மேனேஜர் பானு பிரகாஷ், இளநிலை பொறியாளர்கள் இன்பராஜ், சுதர்சன் ரெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டீஸ்வரன், பச்சை பெருமாள், ராஜலட்சுமி,மேலஈரால் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா மோகன், துணைத் தலைவர் மாரியப்பன், ஊராட்சி செயலாளர் பாலமுருகன், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், அதிமுக ஊராட்சி கழக செயலாளர் சர்க்கரை, பிரதிநிதி மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை