கோவில்பட்டியில் தடை உத்தரவு மீறல்: 15 பேர் கைது
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறி கரோனா நோய் பரப்பும் விதத்தில் வெளியில் சுற்றியது, கூட்டம் கூடியது, கடைகளை திறந்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாக 15 பேரை கைது செய்த போலீஸார் அவர்கள் பயன்படுத்திய 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி மற்றும் மணியாச்சி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட கடம்பூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்ததாக 15 பேரை கைது செய்த போலீஸார் அவர்கள் பயன்படுத்திய 3 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை