ஆம்பூர் அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தண்டவாளத்தில் படுத்து கொண்டு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கோவிந்தாபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே இருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கும் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்ததும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த நபர் குடியாத்தம் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சார்ந்த கோதண்டன் என்பவரின் மகன் ராம்தாஸ் என்பவரும் அதேபோல் இறந்த பெண் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவர் மகள் நந்தினி என்பது தெரியவந்தது பின்னர் இரு உடல்களையும் கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து விசாரணை செய்த போது நந்தினி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் இதற்கு இடையே ராமதாஸ் என்பவரை காதலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வீடியோவை NMS TODAY பார்க்கவும்







கருத்துகள் இல்லை