• சற்று முன்

    கொரனோ முன்னெச்சரிக்கையாக சென்னையில் 3000 ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது


    சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஓட்டுவதற்கான ஸ்டிக்கர்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இந்த வீடுகளின் வெளியே, பிரத்யேகமாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதில், கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு என எழுதப்பட்டிருக்கும்.

    இந்த ஸ்டிக்கர்களை பார்த்ததும், பிற மக்கள் யாரும் அந்த வீட்டுக்குள் செல்வதையே தவிர்த்துவிடுவார்கள் என்பது திட்டமாக உள்ளது. தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கானோர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை, தமிழகத்தில் 9 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad