• சற்று முன்

    நெருக்கடியான நிலையில் கூட சட்ட சபையில் 110ன் விதி அமுல்படுத்தப்பட்டது


    சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பெரிய மாவட்டங்களாக இருந்த விழுப்புரம் மாவட்டம் அண்மையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதேபோல் வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்றாக பிரிக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி என இருமாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.

    இதன்படி தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டதால் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்து இருந்தது. இந்நிலையில் 38வது மாவட்டமாக தற்போது மயிலாடு துறை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தை நாகப்பட்டினம் மயிலாடுதுறை என இரண்டாக பிரித்து இரண்டு தனிமாவட்டங்களாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைகிறது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad