Header Ads

  • சற்று முன்

    காஷ்மீர் புல்வமா தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு டிஐஜி சோனல் வி.மிஸ்ரா ஆறுதல்


    காஷ்மீர் புல்வமா பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் உருவபடத்திற்கு 2019 பிப்ரவரி 14இல் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை  மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்)  டிஐஜி சோனல் வி.மிஸ்ரா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி - மருதாத்தாள் தம்பதி மகன் சுப்பிரமணியன்(28).  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் காவல் படையில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பாதுகாப்புப் படை சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் சுப்பிரமணியன் வீரமரணமடைந்தார்.

    சுப்பிரமணியனுக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். மேலும், சுப்பிரமணியனுக்கு ஒரு சகோதரர் மற்றும் 2  சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், சவலாப்பேரியில் உள்ள இறந்த சுப்பிரமணியனின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படையின் டிஐஜி சோனல் வி.மிஸ்ரா சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர், சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தாய் மருதத்தாள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும், குடும்பத்தினரிடம் நலன் விசாரித்த அவர், குறைகள் மற்றும் தேவைகள் ஏதேனும் இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம் என்றும், அதற்கு அரசு உதவி செய்ய தயாராக இருக்கிறது என்றார் அவர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad